'அழகிய கண்ணே' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் லியோ சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படமான 'டெலிவரி பாய்' எனும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
அறிமுக இயக்குனர் நானி இயக்கத்தில் உருவாகி வரும் 'டெலிவரி பாய்' எனும் திரைப்படத்தில் லியோ சிவகுமார், பிரிகிடா, ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட் , காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எமோஷனல் எக்சன் டிராமா ஜேனரிலான இந்த திரைப்படத்தை அஸாசி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அமுதா லியோனி தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த தருணத்தில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் பட்டிமன்ற பேச்சாளரான திண்டுக்கல் லியோனி ஆகியோர் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM