இயக்குநர் நெல்சன் வெளியிட்ட நடிகர் தர்ஷனின் ' ஹவுஸ் மேட்ஸ் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 04:37 PM
image

'கனா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் தர்ஷன் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஹவுஸ் மேட்ஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான நெல்சன் திலீப்குமார் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் T. ஜெயவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹவுஸ்மேட்ஸ்' எனும் திரைப்படத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு ,  தீனா, வினோதினி வைத்தியநாதன், அப்துல் லீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். 

ஃபேண்டஸி ஹாரர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ப்ளேஸ்மித் ஸ்டுடியோஸ்  மற்றும் சவுத் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். விஜயபிரகாஷ் மற்றும் எஸ்பி சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் நாளாந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் ஃபேண்டஸி ஹாரர் படமாக ஹவுஸ் மேட்ஸ்  தயாராகி இருக்கிறது''  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்