நடிகர்கள் கோபி - சுதாகர் இணையும் 'ஓ காட் பியூட்டிஃபுல்' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 04:37 PM
image

'பரிதாபங்கள்' எனும் பெயரில் டிஜிட்டல் தளத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்களான கோபி - சுதாகர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ' ஓ காட் பியூட்டிஃபுல் ' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓ காட் பியூட்டிஃபுல் ' எனும் திரைப்படத்தில் கோபி ,சுதாகர், வின்சு சாம், வி டி வி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா றொபட், முருகானந்தம், பிரசன்னா , யுவராஜ் கணேசன், ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சக்திவேல் மற்றும் கே. பி. ஸ்ரீ கார்த்திக் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜே சி ஜோ மற்றும் அருண் கௌதம் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகும் இந்த திரைப்படத்தை பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை வசப்படுத்தி இருக்கும் பரிதாபங்கள் புகழ் கோபி- சுதாகர் இணைந்து நடித்திருப்பதாலும், கொமடி ஜேனரிலான படம் என்பதாலும், இந்த பிரத்யேக காணொளிக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்