கண்ணை மூடிக்கொண்டு 'கிஸ்' ( KISS) அடிக்கும் கவின்

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 04:36 PM
image

நட்சத்திர நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிஸ்' ( KISS) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

நடன இயக்குநராக பணியாற்றிய சதீஷ் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் 'கிஸ்' எனும் திரைப்படத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ராணி முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தேவயானி, கௌசல்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இன்றைய நவீன யுக டிஜிட்டல் தலைமுறையினரின் காதலையும், காதல் உணர்வையும் மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும் , நடிகருமான ராகுல் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்த தருணத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான கவினின் கண்கள் மறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படத்தின் கிளர்வோட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் என அவதானிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்