தற்போதைய சூழலில் வைத்திய சாலையில் சுகப் பிரசவமாகவும் சிசேரியனாகவும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்தவுடன் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் இது அவசியமா? என வினா எழுப்புகிறார்கள். ஆனால் வைத்தியர்கள் இத்தகைய பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்துகிறார்கள். மேலும் இது ஏன்? என்பதற்கான விளக்கமும் அவர்கள் பின்வருமாறு அளித்திருக்கிறார்கள்.
நிறை மாதத்தில் அதாவது 37 வாரங்கள் நிறைவடைந்த பிறகு பிறக்கும் பச்சிளம் குழந்தையின் எடை, உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்திய வகையில் இருந்தாலும், அந்த குழந்தையின் தாயாருக்கு நீரிழிவு நோய் இல்லையென்றாலும், பிறந்தவுடன் அந்த குழந்தை அழுது தாயுடன் தாய்ப்பால் அருந்த தொடங்கினால் அந்த குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனை அவசியமில்லை.
ஆனால் 37 வாரங்களுக்கு குறைவாக குழந்தை பிறந்தாலும், அந்த குழந்தையின் எடை குறைவாக இருந்தாலும் ,பிறந்த குழந்தைக்கு ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அந்த குழந்தையின் தாயாருக்கு ஜேஸ்டேஷனல் டயாபடீஸ் எனும் பேறுகால சர்க்கரை நோய் இருந்தாலும் அல்லது கருத்தரிப்பதற்கு முன் அவர்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும், அவர்களுக்குப் பிறக்கும் பச்சிளம் குழந்தைக்கு பிறந்த ஒரு மணி நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனை அவசியம்.
சில குழந்தைகள் பிறந்த இரண்டு மணி தியாலத்திற்கு பிறகு அவர்களுடைய ரத்த சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட குறைந்தால் அவர்களுடைய மூளை வளர்ச்சி பாதிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம். அதனைத் தொடர்ந்து பார்வைத்திறன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சில தருணங்களில் சில குழந்தைகளுக்கு வலிப்பு பாதிப்பும் ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்புகளை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றாலும், தடுக்க வேண்டும் என்றாலும் குழந்தை பிறந்த இரண்டு மணி தியாலத்திலிருந்து ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கோ அல்லது மூன்று மணி நேரத்திற்கோ ஒருமுறை இரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை அவசியமாகிறது.
ஏனெனில் இத்தகைய பச்சிளம் குழந்தைகளுக்கு ஹைபோகிளைசீமியா எனப்படும் இயல்பான அளவைவிட குறைந்த அளவிற்கு ரத்த சர்க்கரையின் அளவு மாறிவிடக் கூடும். சில குழந்தைகளுக்கு அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு நிலைத்த தன்மையை ஏற்படும் தருணம் வரை கிட்டத்தட்ட தொடர்ந்து 48 மணி நேரம் வரை ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
இதன் பிறகு இந்த ரத்த சர்க்கரையின் அளவை மேம்படுத்துவதற்காக பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுமாறு வைத்தியர்கள் கேட்டுக் கொள்வார்கள். சில பிள்ளைகளுக்கு தாய்ப்பால் அருந்திய உடன் சர்க்கரை அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். சிலருக்கு மட்டும் தான் இதற்கான திரவ வடிவிலான பிரத்யேக சிகிச்சை வழங்கப்படும்.
அதே தருணத்தில் குறை மாதத்தில் பிறக்கும் எடை குறைவான குழந்தைகளுக்கும் இத்தகைய ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனை அவசியம். இத்தகைய குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இவர்களுக்கு வலிப்பு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இத்தகைய இரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை அவசியம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதனை பெற்றோர்களும் உணர்ந்து கொண்டு வைத்தியர்களுக்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை வல்லுநர்களும் கேட்டுக்கொள்கிறார்கள்.
வைத்தியர் பிரகாஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM