எம்மில் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அரசாங்கத்தின் அனுசரணையை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனியார் நிதி நிறுவனங்களிடமோ அல்லது புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடமோ அல்லது தொண்டு நிறுவனங்களிடமோ நிதி உதவி பெற்று சிறிய அளவிலான விற்பனை நிலையங்களை தொடங்குவார்கள்.
இவர்களின் இலக்கு நாளாந்த வருமானத்தை தான் மையப்படுத்தியதாக இருக்கும். நாளாந்தம் தங்களுடைய செலவு போக மீதம் ஐந்நூறு ரூபாயாவது லாபம் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுவார்கள்.
இவர்களுக்கு சில தருணங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. பல தருணங்களில் விற்பனை குறைந்து, நஷ்டமும் ஏற்பட தொடங்கும். இதுபோன்ற தருணங்களில் வருவாய் தடையின்றி நாளாந்தம் வருவதற்கு எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை முன்மொழிந்திருக்கிறார்கள்.
நாளாந்த தனவரவிற்கு சந்திர பகவானின் அருள் பரிபூரணமாக தேவை. சந்திரன் என்பது நீர் நிலைகளின் அடையாளம் என்பதால் உங்களுடைய விற்பனை நிலையங்களில் சிறிய அளவிலான செயற்கை நீரூற்றுகளை வாங்கி பாவிக்க தொடங்குங்கள்.
இது சந்தையில் வாங்கி வருவதும் அல்லது இதனை பராமரிப்பதும் கடினம் என நினைப்பவர்கள் இயற்கையான நீரூற்றுகளின் புகைப்படத்தை சற்று பெரிய அளவில் வாங்கி வாடிக்கையாளர்களின் கண்களில் படும்படி விற்பனை நிலையத்தின் சுவர்களில் பதித்து விடுங்கள். இதன் காரணமாக உங்களுடைய வாடிக்கையாளர்கள் குறைவின்றி வருவார்கள். சில தருணங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயரக்கூடும். அதனூடாக வருவாயும், லாபமும் அதிகரிக்க கூடும்.
உடனே எம்மில் சிலர் இத்தகைய செயற்கை நீரூற்றுகளையும், இயற்கையான நீர்வீழ்ச்சியின் புகைப்படங்களையும் வைத்த பிறகும் வியாபாரம் என்பது நஷ்டத்தில்தான் தொடர்கிறது என புலம்புவார்கள்.
இவர்கள் கூடுதலாக ஆந்தை எனும் பறவையின் சிலையை வாங்கி உங்களுடைய விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்களின் கண்களில் படும்படி வைத்திருங்கள். இதிலும் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் ஆந்தையின் புகைப்படத்தை உங்களுடைய விற்பனை நிலையத்தின் சுவரில் பதிக்க வேண்டும். அதன் பிறகு உங்களின் வியாபாரம் உயர்ந்து, லாபமும் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM