தைப்பூச தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை விசேட பூஜைகளும் புதிர் எடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்து மக்களின் வாழ்வில் தமது நற்காரியங்களை தொடங்குவதற்கு தை மாதத்தில் வரும் தைப்பூச தினம் மிகவும் விசேடமானது. இந்நாட்களில் இந்து மக்கள் தாம் நற்காரியங்களான திருமணம், புதுமனை புகுதல், வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தல், புதிய சொத்துக்கள் வாங்குதல் என பல நற்காரியங்களை நிறைவேற்றிக்கொண்டால் பல நன்மைகளை அடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இதன் வெளிப்பாடாக இன்று இலங்கையில் உள்ள பல ஆலயங்களில் தைப்பூச தின பூஜை, வழிபாடுகள், நெற்கதிர் எடுக்கும் சடங்கு முறைகள் நடத்தப்பட்டன.
மட்டக்களப்பு
இன்றைய தைப்பூச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை, வழிபாடுகள் ஆலய குரு சிவஸ்ரீ பாலகிருஸ்ண சர்மா குருக்கள் தலைமையில் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இதன்போது ஆலய வளாகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் ஆலய குருக்கள் மற்றும் நிர்வாக சபையினரால் புதிர் எடுக்கும் இடத்தில் சூரியனுக்கும் நெற்கதிர்களுக்கும் விசேட பூஜைகள் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தமிழர் பாரம்பரிய முறைப்படி அறுவடை செய்யப்பட்டு, அந்த நெற்கதிர்கள் ஆலயத்தில் உள்ள முக்கிய தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
பின்னர், பூசையில் கலந்துகொண்ட பெருமளவிலான பக்தர்களுக்கு குறைவில்லாத செல்வம் வேண்டி ஆலய நிர்வாகத்தினரால் நெற்கதிர்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் இந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வம் வந்துசேரும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
வவுனியா
வவுனியா நெளுக்குளம் முருகன் ஆலயத்தில் தைப்பூச நாளான இன்று (11) புதிர் எடுக்கும் நிகழ்வு பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
நெளுக்குளம் வயல்வெளியில் புதிரெடுத்து, அவற்றை மாட்டு வண்டிலில் ஏற்றி, மேளதாளம் முழங்க ஆலயத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அவை உரலில் இடித்து அரிசியாக்கப்பட்டு, புதிய பானையில் பொங்கல் செய்து படைக்கப்பட்டது.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற புதிர் எடுக்கும் இந்நிகழ்வை பெருந்திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM