இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக்கல்வி பிரிவிற்கு உட்பட்ட எந்தான மீனாட்சியம்மாள் பாடசாலையின் அதிபரை பனி நீக்கம் செய்யுமாறு கோரியே பெற்றொர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை பத்து மணி அளவில் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிலான பெற்றொர்கள மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சுமார் இரண்டு மணித்தியாலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போது குறித்த பாடசாலையில் கடமையாற்றுகின்ற அதிபர் கடந்த 2019ஆம் ஆண்டு மீனாட்சியம்மாள் பாடசாலையில் கடமைகளை பொருப்பெற்றுள்ளார் அன்று முதல் இன்று வரை பாடசாலையில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் அதிபர் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பிற்பகள் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு நிவித்திகல வலயக்கல்வியின் அதிகாரி ஒருவர் வருகை தந்தார்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வலயக்கல்வி அதிகாரியிடம் பெற்றோர்கள் அதிபர் தொடர்பிலான பிரச்சினைகளை கவலையுடன் கண்ணீர் விட்டவாரு முன்வைத்தார்கள். குறித்த பிரச்சினை தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஆர்ப்பாட்டகாரர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த அதிகாரி பெற்றோர்களுடன் பாடசாலைக்கு சென்றார்.
பாடசாலைக்கு சென்ற அதிகாரி பாசாலையின் பிரதி அதிபருடன் கலந்துரையாடியதுடன் பாடசாலையில் உள்ள மாணவ மாணவிகளுடைய மற்றும் ஆசிரியர்களுடைய பதிவு புத்தகங்களை பரிசோதனை செய்த அதிகாரி பதிவு புத்தகங்களில் பிழைகள் உள்ளதாக ஒப்புகொண்டுள்ளார்.
அதிபர் தொடர்பில் பெற்றொர்கள் முன்வைத்த பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பதில் வழங்குவதாக அங்கு வந்த அதிகாரி பெற்றொர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM