மஹிந்த அணி புதிய கட்சி அமைத்து உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தென்­பது அர­சாங்­கத்­திற்கு ஒரு சவால் அல்ல. நாட்டு மக்கள் இன்று அச்­ச­மின்றி சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். எனவே அச் சுதந்­தி­ரத்தை மீள இழப்­ப­தற்கு மக்கள் தயா­ராக மாட்­டார்கள் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரி­வித்தார்.

தைப் பொங்கல் திரு­நாளை முன்­னிட்டு நேற்று வெள்ளிக்­கி­ழமை பம்­ப­லப்­பிட்டி கதி­ரேசன் கோவிலில் இடம்­பெற்ற விசேட பூஜை வழி­பா­டு­களில் கலந்து கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­போதே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான குழு­வினர் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் புதிய கட்­சி­யொன்றை அமைத்துப் போட்­டி­யிட போவ­தாக தெரி­வித்­துள்­ளனர். இது அர­சுக்கு ஒரு சவால் அல்ல.

மீண்டும் நாட்டை ஊழல் மோச­டிகள் நிறைந்த யுக­மாக மாற்­று­வ­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம். இம் முறை தைப் பொங்கல் திரு­நாள் நாட்டில் அனைத்து மக்­களும் உண்­மை­யான இலங்­கை­யர்கள் என்ற எண்­ணத்­துடன் வாழும் நிலை­யி­லேயே கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. இதற்­கான ஜன­நா­ய­கத்தை நாம் வெற்றி கொண்டோம். அந்த ஜன­நா­யகம் இன்று பாது­காக்­கப்­ப­டு­கின்­றது.

நாட்டில் அனைத்து மக்­களும் இன்று இலங்­கை­யர்­க­ளாக வாழும் அடித்­தளம் போடப்­பட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் மக்­களின் சட்டைப் பைகளில் இருந்­த­வைகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. எனவே இவ்­வா­றா­ன­வர்­களை மீண்டும் ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு மக்கள் தயா­ராக இல்லை.

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் நாட்டை அபி­வி­ருத்தி பாதையில் முன்­னெ­டுப்­ப­தற்­கான பய­ணத்தை ஆரம்­பித்­துள்­ளனர். நாட்டை அழித்து ஒரு­வ­ருக்­கொ­ருவர் மோதலில் ஈடு­படும் யுகத்­திற்கு இன்று முடி­வு­கட்­டப்­பட்­டுள்­ளது. மக்கள் இன்று அச்­ச­மின்றி சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர்.

எனவே, மீண்டும் இவ்­வா­றான யுகத்­தையும், வெள்ளைவேன் கலாசாரத்தையும் ஏற்படுத்த மக்கள் முயற்சிக்க மாட்டார்கள். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது கூட்டணியும் எந்தக் கட்சியில் தேர்தலில் களமிறங்கினாலும் தோல்வி நிச்சயமாகும் என்றார்.