வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டது.
சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகின்றனர்.
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM