(ஆர்.யசி)

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் நஷ்ட ஈடு கொடுக்கவும் அரசாங்கம் 266 மில்லியன் ஒதுக்கீடு. இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நிவாரணப் பொருட்களும் 23 நாடுகளின் நிதி உதவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் நிலவரங்களை தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.