இந்திய வீட்டுத்திட்டங்களுக்கான காணி உரித்து தொடர்பில் இ.தொ.கா. பிரமுகர்கள் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் கலந்துரையாடல்

11 Feb, 2025 | 01:23 PM
image

மலையக மக்களுக்கான காணி உரிமை மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜாவின் கவனத்துக் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் முக்கிய பிரமுகர்களுக்கிடையில் நேற்று திங்கட்கிழமை (10)  இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை (வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

அதேபோல் பெருந்தோட்ட பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்காக, ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கினங்க இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3 பில்லியன் ரூபா நிதி உதவிக்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை தற்போதைய அரசாங்கத்தினூடாக மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம்  கேட்டுக்கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

2025-03-20 15:01:05
news-image

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்த...

2025-03-20 14:54:53
news-image

ஊழியர் படையிலுள்ள 8 மில்லியன் பேரில்...

2025-03-20 14:31:42
news-image

தென்னந்தோப்புக்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடிய...

2025-03-20 14:52:31
news-image

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்...

2025-03-20 14:10:20
news-image

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்...

2025-03-20 14:08:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45