தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம் வரும் கம்பளைக் கந்தன்...!

Published By: Digital Desk 7

11 Feb, 2025 | 10:28 AM
image

சிவமைந்தனாய் மானிடர் குறை களைய

சிவனார் நெற்றிக்கண் உதித்த

சிவக்குமரா குகநேய அடியார்கள் போற்ற 

சித்திரத்தேரேறி வருக வருக....! 

வானோர் வேந்தனாம் இந்திரன் திருமகள்

தேவயானியுடன் திருக்காட்சி கொண்ட 

திருப்பரங்குன்ற திருக்குமரா 

சித்திரத்தேரேறி வருக வருக....! 

அமரர் இடர் தீர அறுபடைவேல் கொண்டு 

திணவெடுத்த புஜங்களுடன் சூரர் தம் குலமழித்த திருச்செந்தூரா சித்திரத்தேரேறி வருக வருக....! 

ஆண்டி கோலமுற்று ஞானப்பழமாய் 

பழம் நீயென ஆவினன் குடி நின்று

அடியவர் இன்புற வேள்வி செய் 

பழனிவேலவா சித்திரத்தேரேறி வருக வருக....! 

தந்தைக்கு ஆசானாய் குருபீடம் அமர்ந்து ஞானகுருவாய் ப்ரவணப் பொருளுரைத்து 

தகப்பன்சாமி எனும் திருநாமம் ஏற்ற சுவாமிநாதனே சித்திரத்தேரேறி வருக வருக...! 

குறமகள் வள்ளி மணக்கோலமாய் திருத்தணிகைதனில் சந்ததமும் திருக்கை வேலுடன் திருக்காட்சி நல்கும் திருத்தணி  வேலனே சித்திரத்தேரேறி வருக வருக...! 

வள்ளி தேவயானி சமேதராய் வண்ண மயில் விளையாடும் பழமுதிர்சோலை தனில் அருட்காட்சி மேவும் அருட்குமரா சித்திரத்தேரேறி வருக வருக....! 

மூத்தோன் வேழமுகன்,வள்ளி தேவயானி புடைசூழ திருநகராம் சீர்மிகு கம்பளை 

மாநகர்தனில் பக்தர் நலன் காக்க வடிவுடை

வடிவேலவா சித்திரத்தேரேறி வருக வருக....! 

வைகறைப் பொழுதில் வற்றா கங்கையாம் மஹாவலி தீர்த்தம் பொங்கும் பூம்புனலாய்

நந்நீராடி வையம் போற்றிட எம் சொந்தப் பெருமானாகிய கந்தப் பெருமானே சித்திரத்தேரேறி வருக வருக...! 

முத்துத் தமிழ் செப்புவித்த அருணகிரி 

திருமுருகன் திருப்புகழ் பகலவன் சுடரொளியாய் தரணி எங்கனும் மேவ

நித்தம் தம் பக்தருக்கு நற்கருணைதனை

தத்தம் செய் தணிகாசலனே சித்திரத்தேரேறி வருக வருக...! 

தெய்வப் புலவோன் நக்கீரன்,நின் திருத்தாழ் பற்றி நற்றமிழால் பெரும்புகழ் உரைத்த ஆற்றுப்படைதனில் அகிலம் போற்றிய

அறுபடையோனே சித்திரத்தேரேறி வருக வருக....! 

சிவபூமி லங்காபுரி உயர் நிலமாம் மலையகம்

கீர்த்தி செய் கம்பளைத் தரணி காத்து ரட்ஷிக்கும் கலியுக வரதனே கதிர்காமத் துறை கந்தா சித்திரத்தேரேறி வருக வருக....! 

ஸ்ரீ முத்துமாரி  மைந்தா சிவனார் திருக்குமரா தைப்பூச சுப நற்தினமதில் வையம் உய்ய வானோர் மலர்ச் சொரிய கம்பளைத்

திருவீதிதனில் எண்கோண முகபத்ர

கமலஹார சித்திரத்தேரேறி வருக வருக.....! 

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் .

உபசெயலாளர்:ஸ்ரீ முத்துமாரியம்மன் 

தேவஸ்தானம் கம்பளை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54
news-image

மகத்தில் தேர் ஏறும் மகமாயி  

2025-03-13 11:01:51
news-image

ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில...

2025-03-11 12:24:46
news-image

தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவுநாளில் சமர்ப்பணமான...

2025-03-05 13:37:38
news-image

எனக்கு கர்நாடக இசையை கற்பித்து நல்லிணக்கத்தை...

2025-02-22 11:52:08
news-image

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள்...

2025-02-22 11:53:38
news-image

வடக்கில் கலைத்துறையில் சாதித்து வரும் இளைஞன் 

2025-02-21 19:24:07
news-image

“நாட்டிய கலா மந்திர்” நடனக் கலாசாலை...

2025-02-20 14:39:18
news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15