துப்பாக்கியுடன் மாயமான பொலிஸ் கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது !

Published By: Digital Desk 2

11 Feb, 2025 | 11:03 AM
image

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த சனிக்கிழமை (08) தனது துப்பாக்கியுடன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் பெற்றோர், திங்கட்கிழமை (10) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25