காலி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் 

Published By: Digital Desk 3

11 Feb, 2025 | 09:36 AM
image

நாட்டில் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்று செவ்வாய்க்கிழமை (11) நாள் முழுவதும் காற்றின் தர சுட்டெண் 58 தொடக்கம் 108க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிப்பதோடு, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கின்றது.

நேற்று திங்கட்கிழமை  (10) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமான நிலையிலும், காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளது.

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமானதாக காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30  மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 1.00 மணி முதல் 2.00  மணி வரை காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25