சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக வாழைப்பழங்களை பொதியிட்டு அதில் தனது புகைப்படம் மற்றும் பெயரினை உள்ளிட்டு விநியோகித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

மேலும், அமைச்சரின் புகைப்படத்துடன் கூடிய அந்த பொதியில்" காலியின் முதன்மையானவருடன் முன்னோக்கி என்றும், அமைச்சரின் தொலைப்பேசி இலக்கம் மற்றும் காலி - தல்கஸ்வல பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டின் தொலைப்பேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த வீட்டு தொலைப்பேசி இலக்கம் பொய்யானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பிலே அமைச்சர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.