வவுனியா வைரவபுளியங்குளத்தில் போதை ஆசாமிகள் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதில் மாணவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (11) மாலை வைரவளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் செயற்பாட்டை முடித்து வீதியால் வந்து கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவன் மீது வைரவபுளியங்குளத்தில் வழமையாக கூடி நிற்கும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு கண்ணாடி துண்டுகளால் வெட்டியுள்ளனர்.
இதன் காரணமாக மாணவன் காயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்காக நம் மாணவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த போதை ஆசாமிகள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இந்த போதை அடிமையான இளைஞர்கள் குழு அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாட்டை முடித்து வரும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசாரின் அசமந்தமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM