தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை குற்றவாளியாக்கும் அரசாங்கம் - உதய கம்மன்பில

10 Feb, 2025 | 05:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் ஒட்டுமொத்த உயிரினங்களையும் குற்றவாளியாக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

குரங்கினால் தான் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என்று மக்களை மூடர்களாக்கும் வகையில் பேசுவதை மின்சக்தி அமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்துக்கும் உயிரினங்களுக்கும் ஏதும் முற்பகை உள்ளதா என்று தெரியவில்லை. வீட்டில் வளர்க்கும் பிரயாணிகளுக்கு உணவளிப்பதால் தான் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். காட்டு விலங்குகளால் தான் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.

வீடுகளில் தேங்காய் சம்பல் மற்றும் உணவுக்கு தேங்காய் பால் எடுப்பதால் சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார். 

தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் போலியான காரணிகளை மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறது.

இந்த அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் உயிரினங்களை குற்றவாளியாக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

மின்பிறப்பாக்கியில் குரங்கு மோதியதால் மின்விநியோகம் தடைபட்டது என்று மின்சாரத்துறை அமைச்சர் நேற்று குறிப்பிட்டார். 

தற்போது மின்விநியோக கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை  சபை குறிப்பிட்டுள்ளது. ஆகவே மக்களை மூடர்களாக்கும் வகையில் கருத்துரைப்பதை அமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25