சீனாவின் 'சகோதர பாசம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று திங்கட்கிழமை (10) நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
கட்டுக்காரன் குடியிருப்பு மற்றும் துள்ளுக்குடியிறுப்பு பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின் தங்கிய குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன் வெய் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின்போது 350 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்,மன்னார் பிரதேசச் செயலாளர்.எம்.பிரதீப் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM