பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Published By: Digital Desk 7

10 Feb, 2025 | 05:45 PM
image

(க.கிஷாந்தன்)

கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரண்டு மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரிகள், குறித்த பேரூந்து பொகவந்தலாவ நகருக்கு வந்ததன் பின் அவரை சோதனையிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14
news-image

பரீட்சார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு...

2025-03-21 10:45:19
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமது...

2025-03-21 09:54:11
news-image

அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:52:35
news-image

அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு...

2025-03-21 10:27:27
news-image

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118...

2025-03-21 10:10:09
news-image

யாழில் பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-03-21 10:19:06
news-image

திருகோணமலையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 138...

2025-03-21 10:00:46