(இராஜதுரை ஹஷான்)
அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 43 பேர் பல மில்லியன் ரூபாய் அளவில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டுள்ளமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
சுனாமி பேரழிவுக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம் தான் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இயற்கை மற்றும் இதர அனர்த்தத்தினால் வீடு ஒன்று முழுமையாக சேதமடைந்தால், 2005 ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் உயர்ந்தபட்சம் 25 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
ஆனால் 2022 ஆம் ஆண்டு வன்முறை சம்பவத்தை தொடர்ந்து வீடுகளை இழந்ததாக குறிப்பிட்டுக் கொண்டு 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி கணக்கில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
சட்டத்தின் பிரகாரம் ஒருவருக்கு தலா 25 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்க வேண்டும். அல்லது நடைமுறை காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 50 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் சட்டத்துக்கு முரணாக கோடி கணக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டவர்களில் ஒருசிலர் தாங்கள் இழப்பீட்டுத் தொகையை கோரவில்லை என்று தற்போது குறிப்பிடுகிறார்கள். தமக்கு இழப்பீடு வேண்டும் என்று இந்த 43 பேரும் கடந்த அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மதிப்பீடு குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கமைவாகவே இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அரச நிவாரண சேவை சட்டத்தின் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மதிப்பீடு குழு அறிக்கை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM