முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு : வாகனத்துடன் சாரதி கைது!

Published By: Digital Desk 7

10 Feb, 2025 | 04:26 PM
image

கூழாமுறிப்பு "வி" காட்டுப்பகுதியில் தேக்கு மரம் வெட்டப்பட்டு, அதன் குற்றிகளை கடத்தத் தயாராக இருந்த கெப் வாகன சாரதி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு -  ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு “வி” காட்டுப்பகுதியில் மரக்குற்றிகளை கடத்தும் முயற்சி இடம்பெறுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதனையடுத்து இன்று திங்கட்கிழமை (10) அதிகாலை புதுக்குடியிருப்பு நோக்கி வாகனத்தில் கொண்டுசெல்ல தயாராக இருந்த 11 தேக்கு மரக்குற்றிகள் பொலிஸ் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு மரக்குற்றிகளை கடத்தும் திட்டம்  முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 29 வயதுடைய வசந்தபுரம் மன்னாகண்டலை சேர்ந்த சாரதி கெப் ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17
news-image

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

2025-03-21 11:51:15
news-image

வாரியப்பொலவில் விமானப்படை விமானம் விபத்து :...

2025-03-21 11:31:24
news-image

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஆஜராகாது இருந்தால்...

2025-03-21 11:13:13
news-image

மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95...

2025-03-21 11:01:18
news-image

தலவாக்கலை மிடில்டன் பஸார் மதுபானசாலை அருகில்...

2025-03-21 10:47:00
news-image

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

2025-03-21 10:49:14
news-image

பரீட்சார்த்த வேலையை மீண்டும் செய்தால் நாட்டுக்கு...

2025-03-21 10:45:19
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமது...

2025-03-21 09:54:11
news-image

அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள்...

2025-03-21 09:52:35
news-image

அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு...

2025-03-21 10:27:27