தமிழ் திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான ராதா ரவி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' வருணன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ' வருணன்' எனும் திரைப்படத்தில் ராதா ரவி, சரண் ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன் , ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ் ஸ்ரீ ராமா சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். 'நீரின்றி அமையாது உலகு' எனும் கருத்தினை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை யாக்கை பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. மேலும் படத்தினை பற்றிய எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியது. இந்த தருணத்தில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM