புதுமுக நடிகர் பவிஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
லெனின் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். காதலை உணர்வை நுட்பமாக அவதானித்து விவரிக்கும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கஸ்தூரிராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 21ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் இயக்குநர் தனுஷ் தோன்றி, 'இது வழக்கமான கதை' என்றும், 'மகிழ்ச்சியுடன் வாருங்கள் உற்சாகத்துடன் செல்லுங்கள்' என்று சொல்லி இருப்பதாலும், காதலுக்கும் காதல் பிரிவிற்கும் இடையேயான உணர்வை உரக்க பேசும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும், அனைத்து இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
பாடல்களும் வெளியாகி வெற்றி பெற்றிருப்பதால் இந்த திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே காண வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM