நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன பரிசோதனை

Published By: Digital Desk 2

10 Feb, 2025 | 04:08 PM
image

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு நுரையீரல் தொடர்பான தொற்று பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இந்த தருணத்தில் நுரையீரல் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை துல்லியமாக அவதானிப்பதற்காக எண்டோபிரான்சியல் அல்ட்ரா சவுண்ட் ( EBUS) எனும் நவீன பரிசோதனை முறை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நுரையீரலில் தொற்று பாதிப்பு, காச நோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டிருக்கிறது என்றால் அது நுரையீரலில் கட்டியாக உருவெடுக்கும். சிலருக்கு சுவாச குழாய் பகுதியில் நெறி கட்டி பாதிப்பாகவும் அறிகுறியை வெளிப்படுத்தலாம். இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானிக்க தற்போது  எண்டோ பிரான்சியல் அல்ட்ரா சவுண்ட் எனும் நவீன பரிசோதனை முறை அறிமுகமாகி இருக்கிறது.

இந்த பரிசோதனையின் போது உங்கள் வாய் மற்றும் மூச்சு குழாய் வழியாக நுரையீரல் பகுதிக்குள் ஒரு நெகிழ்வான குழாய் செலுத்தப்பட்டு அதன் முனைப்பகுதியில் அமையப்பெற்றிருக்கும் பிரத்யேக கமெரா மற்றும் கருவி மூலம் நுரையீரல் பகுதி முழுவதும் துல்லியமாக ஆராயப்படுகிறது. அதன் பிறகு அங்கிருந்து சந்தேகிக்கப்படும் பகுதியில் உள்ள கட்டியிலிருந்து சிறிதளவு திசு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. 

சிலருக்கு இத்தகைய பரிசோதனை முறையை மேற்கொள்ளும் போது இருமல் மற்றும் தொண்டை வலி பாதிப்பு ஏற்படக்கூடும். ஆனால் இதற்காக சிகிச்சை பெற்ற பிறகு முழுமையான நிவாரணம் கிடைக்கும். இந்த பரிசோதனையின் போது உங்களுடைய நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் , தொற்று அல்லது புற்றுநோய்க்கான சாத்தியக்கூறினை முழுமையாக கண்டறிந்து அதற்கேற்ற வகையில் உங்களுடைய சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதன் பிறகு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இத்தகைய பரிசோதனை மிகவும் பாதுகாப்பானது என்றும், வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பரிசோதனையின் போது மேற்கொள்ளப்படும் திசு பரிசோதனையின் காரணமாக ரத்தப்போக்கு ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் இத்தகைய சிறிய பக்க விளைவிற்கு முறையாக சிகிச்சை மேற்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். அத்துடன் நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து முறையான மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ குணம் நுட்பங்களுடன் கூடிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

வைத்தியர் நவீன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34