முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

10 Feb, 2025 | 04:07 PM
image

சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக " சீனாவின் சகோதர பாசம்" என்னும் வாசகத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (09) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி  ஜு யான்வேய் (Mr.Zhu Yanwei)  கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி  பயனாளர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

குறித்த இந்த உலருணவுப்பொதி வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. 

இதில் முதல் கட்டமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஏனைய 250 பொதிகளும் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்டுள்ள  மக்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், சீனத்தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25