எம்மில் பலரும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஏற்கனவே விதிக்கப்பட்டது தான் என நம்புகிறார்கள். அதனால் தான் தாங்கள் விரும்பும் தொழிலை விட தங்களுக்கு எந்த தொழில் ஜாதக ரீதியாக பொருத்தமானதாக இருக்கிறதோ அதனைக் கற்று தெரிவு செய்து, அதனையே தங்களது வாழ்க்கையாக ஏற்றுக்கொள்கிறார்கள். பலரது ஜாதகத்தில் பல வகையினதான சுப யோகங்கள் இருப்பதை காண்கிறோம். குறிப்பாக வல்லகி , தாமனி, பாசம், கேதாரம், சூலம், யுகம், கோளம் என 25க்கும் மேற்பட்ட சுப யோகங்கள் இருப்பதாக சோதிட சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. இதில் கேள யோகம் என்பதும் ஒன்று.
ஒரு ஜாதக கட்டத்தில் இயற்கை சுப கிரகமான குருவும், கேதுவும் ஒரே ராசியில் இருந்தால் கேள யோகம் ஏற்படும் என தெரிவிக்கிறார்கள்.
ராகு, கேது எனும் சாயா கிரகங்கள் தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனைத் தான் முதலில் தருவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே குருவுடன் இணைந்திருக்கும் கேது குரு வழங்கும் செல்வ வளம் உள்ளிட்ட பலன்களை தருகின்ற அமைப்பை பெறுகிறார்.
இந்த ஜாதகருக்கு குரு திசையிலும், கேது திசையிலும் அதிகமான தன வரவு கிடைக்கும். திருமணமான தம்பதியர்களுக்கு கேது திசை நடைபெறும்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைப்பும் உருவாகும்.
மேலும் இந்த ஜாதகருக்கு குரு திசை கேது புத்தியிலும், கேது திசை குரு புத்தியிலும் சொல் வாக்கு, செல்வாக்கு ஏற்படும். மேலும் கேள யோகம் பெற்றவர்களுக்கு ஏனைய யோகங்களுக்கு நிகராக அனைத்து சுப பலன்களும் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM