ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்கள் ஒரேயொரு வானொலி நிலையத்திற்குள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தலிபான்கள் அந்த வானொலி சேவையை தடை செய்துள்ளனர்.
பெண்கள் நிர்வகித்த,பெண்கள் கல்வி தொடர்பான விடயங்களை வெளியிட்டு வந்த காபுலை தளமாக கொண்ட ரேடியோ பேகம் என்ற வானொலி சேவை அலுவலகத்திற்குள் நுழைந்த தலிபானின் தகவல் கலாச்சார அமைச்சரவையின் அதிகாரிகள் ஊடகவியலாளர்களை தடுத்துவைத்த பின்னர் ஊடக நிறுவனத்தின் அலுவலகங்களை சோதனையிட்டுள்ளனர்.
தலிபான் அதிகாரிகள் கணிணிகளை வன்தட்டுகள் கோப்புகள் கையடக்க தொலைபேசி கைப்பற்றினர் இரண்டு பெண் ஊடகவியலாளர்கள் உட்பட கைதுசெய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட வானொலி நிலையத்தின் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதை தலிபானின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
குறிப்பிட்ட வானொலி நிலையம் ஒலிபரப்பு கொள்கையை வானொலி அனுமதிப்பத்திர உரிமையை மீறியது என தெரிவித்துள்ள தலிபான் அதிகாரிகள் எதிர்காலத்தில் அந்த வானொலி நிலையம் குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
தலிபான்களின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள எல்லைகள் அற்ற பத்திரிகையாளர்கள் சங்கம் தலிபான்கள் இந்த தடையை மீளப்பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்படுவதற்கு ஆப்கான் பெண்களிற்கான சுகாதாரம் உடல்நலம் கல்வி போன்ற நிகழ்ச்சிகளை ஆறு மணிநேரம் ஒலிபரப்பிவந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM