(எம்.மனோசித்ரா)
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையால் செயலிழந்த நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு சுமார் 4 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமான சில பிரதேசங்களில் மின் விநியோகத்தை சில வரையறைகளுடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) நாடு முழுவதும் சில மணித்தியாலங்கள் மின் தடை ஏற்பட்டது.
சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பிரதேசங்களில் மீண்டும் இடைக்கிடை மின்தடை ஏற்பட்டது.
இந்நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்தன.
இதன் காரணமாக தேசிய மின் உற்பத்தியில் 900 மெகா வோல்ட் மின்சாரம் இழக்கப்பட்டது. எனவே இந்த இயந்திரங்கள் மீள இயங்கும் வரை சில பிரதேசங்களில் வரையறைகளுடன் மின் விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டியேற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மின்சார சபை தலைவரும் மின்சக்தி அமைச்சரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதத்தை அனுப்பி வைத்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் குறைகளை அறிந்து தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். எனவே முன்னைய ஆட்சியாளர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM