(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட திடீர் மின் வெட்டு தொடர்பான குறுகிய கால அறிக்கை மின்சக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
ஒரே சந்தர்ப்பத்தில் முழு நாட்டில் மின் தடை ஏற்பட்டமைக்கான காரணம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் தலிக் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.
இனிவரும் நாட்களிலும் மின் விநியோகத்தடையை அமுல்படுத்த வேண்டியேற்படுமா என்பது தொடர்பிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
தற்போதுள்ள நிலைவரத்தின் அடிப்படையில் ஏற்படக் கூடிய அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதற்கமைய நாளாந்தம் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் விரைவில் மின்சாரசபை அறிவிக்கும் என தலிக் சியம்பலாப்பிட்டி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் காணப்படும் குறைந்த மின்சாரத் தேவையும், ஒப்பீட்டளவில் சூரிய சக்தியின் குறைந்த நிலைத்தன்மையும் மொத்த மின்சார உற்பத்தியில் அதிக சதவீதத்தை உற்பத்தி செய்தமையால் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே அதற்கான காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலைமையை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக தேசிய மின்சார கட்டமைப்பு சமநிலையற்றதாக மாறியது. இதன் விளைவாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, மின்சார சேமிப்பு மின்கல வசதிகள் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த இலங்கை மின்சார சபையும் வலுசக்தி அமைச்சும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM