பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரனுக்குமிடையில் அண்­மைக்­கா­ல­மாக நிலவி வந்த முரண்­பா­டுகள் யாழில் நடை­பெற்ற தேசிய தைப்­பொங்கல் நிகழ்வின் மூலம் நிறை­வுக்கு வந்­துள்­ளன.

நேற்­றை­ய­தினம் யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தேசிய தைப்­பொங்கல் நிகழ்வில் அதி­தி­யாகப் பங்­கேற்­ப­தற்­காக வரு­கை­தந்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மண்­ட­பத்தின் வாயி­லுக்குச் சென்று கைலாகு

கொடுத்து பொன்­னாடை போர்த்தி தலைப்­பாகை சூடி இன்­மு­கத்­துடன் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வர­வேற்­றி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்து இரு­வரும் அரு­க­ரு­கி­லுள்ள ஆச­னங்­களில் அமர்ந்­தி­ருந்­த­தோடு விழாவின் ஆரம்பம் முதல் இறு­தி­வ­ரையில் நீண்­ட­நே­ர­மாக பரஸ்­பரம் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

முன்­ன­தாக ஆட்சி மாற்­றத்தின் பின்னர் முதற்­த­ட­வை­யாக வட­மா­கா­ணத்­துக்கு விஜயம் செய்த பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன இரா­ணு­வத்­தி­னரை வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­று­வது தொடர்­பாக கடும் தொனி­யி­லான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் அன்­றைய காலத்தில் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தனது மரு­ம­க­னான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பயன்­ப­டுத்தி தந்­தி­ரோ­பா­ய­மாக அர­சியல் செயற்­பா­டு­களை எவ்­வாறு முன்­னெ­டுத்­தாரோ அதே­போன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தனது மரு­ம­க­னான ருவான் விஜ­ய­வர்­த­னவைப் பயன்­ப­டுத்தி நகர்­வு­களை மேற்­கொள்­வ­தாக சாடி­யி­ருந்தார்.

அத­னைத்­தொ­டர்ந்து இரு­த­ரப்­பி­னரும் பரஸ்­பர கருத்­துக்­களை வெளி­யிட்ட நிலையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் வலி.வடக்கின் ஒரு பகு­தியில் காணி­களை விடு­விக்கும் வைப­வத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வட­மா­காண முத­ல­மைச்சர் பங்­கேற்­றி­ருந்­த­போதும் இரு­வரும் எந்­த­வி­த­மான உரை­யா­டல்­க­ளையும் மேற்கொள்ளவில்லை.

அதனைத்தொடர்ந்தும் இருதரப்பினரிடையேயும் எவ்விதமான பேச்சுவார்த்தைகளோ கலந்துரையாடல்களே அற்ற முரண்பாடான சூழ்நிலையொன்றே நிலவிவந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் அந்த நிலைமையில் மாற்றமொன்று ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.