(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக், பரபதி விளையாட்டரங்கில் நேற்று (9) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா குவித்த அபார சதத்தின் உதவியுடன் 4 விக்கெட்களால் இந்தியா இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க தொடரை இப்போதைக்கு 2 - 0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.
இப் போட்டியில் தனது 32ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதத்தைக் குவித்ததன் மூலம் தன்னை சந்தேகக் கண்களுடன் நோக்கியவர்களுக்கு தனது துடுப்பாட்ட ஆற்றல் மங்கவில்லை என்பதையும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தலைமை தாங்க தயாராக இருப்பதையும் ரோஹித் ஷர்மா உணர்த்தியுள்ளார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, இரண்டு அரைச் சதங்கள் உட்பட எழுவர் பெற்ற இரட்டை இலக்க எண்ணிக்கைகளுடன் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களைக் குவித்தது.
பில் சொல்ட் (26), பென் டக்கட் ஆகிய இருவரும் 65 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மொத்த எண்ணிக்கை 102 ஓட்டங்களாக இருந்தபோது பென் டக்கட் 65 ஓட்டங்களுடன் இரண்டாவதாக ஆட்டம் இழந்தார்.
ஜோ ரூட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் ஹெரி ப்றூக்குடன் 66 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் ஜொஸ் பட்லருடன் 51 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
ஜோ ரூட் 69 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 31 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக 41 ஓட்டங்களைப் பெற்றதடன் பின்வரிசையில் ஆதில் ராஷித் 14 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
305 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 44.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மா. அடுத்த தலைவராக வரக்கூடியவர் என கருதப்படும் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 100 பந்துகளில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
முதலில் ஆட்டம் இழந்த ஷுப்மான் கில் 60 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லி 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா 90 பந்துகளில் 12 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார்.
ஷ்ரேயாஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் ரோஹித் ஷர்மா 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் தலா 10 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினர்.
அக்சார் பட்டேல் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்று இந்தியாவுக்கு வெற்றி இலக்கை அடைய உதவினர்.
பந்துவீச்சில் ஜமி ஓவர்ட்டன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: ரோஹித் ஷர்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM