'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் - அவரை நாடு கடத்தப்போவதில்லை"- டிரம்ப்

Published By: Rajeeban

10 Feb, 2025 | 11:32 AM
image

பிரிட்டிஸ் இளவரசர் ஹரியை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்போவதில்லை என தெரிவித்துள்ள  அமெரிக்க ஜனாதிபதி அவர் ஏற்கனவே மனைவியால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

ஹரியின் மனைவி மேகனை மோசமானவர் என  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தியமைக்காக ஹரியை நாடு கடத்தும் திட்டம் எதுவுமில்லை என தெரிவித்துள்ள டிரம்ப் ஹரியின் விசாவை இரத்துசெய்வார் என்ற ஊகங்களிற்கு முடிவுகட்டியுள்ளார்.

ஹரி தனது சுயசரிதையில் தான் போதைப்பொருளை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார், இது தொடர்பில்அவர் நீண்ட சட்டப்போராட்டத்தினை எதிர்கொண்டுள்ளார்.

நியுயோர்க் போஸ்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் டிரம்ப் தலையிடுவாரா என்ற கேள்விக்கு நான் அதனை செய்யவிரும்பவில்லை அவரை தனியாக விட்டுவிடுகின்றேன் அவர் தனது மனைவியால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் மேகன் மோசமானவர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தான் வெற்றிபெற்றால் ஹரிக்கு எந்த உதவியையும் வெள்ளை மாளிகை வழங்காது என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51