காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து சமப்படுத்தப்படவேண்டிய பகுதி - டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்து

10 Feb, 2025 | 11:01 AM
image

காசாவை  கையகப்படுத்தும் தனது திட்டத்தை மீண்டும் உறுதி செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காசாவை பெரும் ரியல் எஸ்டேட் என வர்ணித்துள்ளார்.

மீண்டும் காசா மக்களை அல்லது பாலஸ்தீனியர்களை அந்த பகுதிக்கு செல்வதற்குஅனுமதிப்பது பெரும் தவறு என கருதுவதாக தெரிவித்துள்ள டிரம்ப் ஹமாஸ் மீண்டும் அங்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காசாவை மிகப்பெரிய ரியல் எஸ்டேட்டாக நினையுங்கள் காசாவை அமெரிக்கா நிச்சயமாக கையகப்படுத்தப்போகின்றது மெதுவாக மெதுவாக ஆனால் நிச்சயமாக என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவசரப்படமாட்டோம் ஆனால் அபிவிருத்தி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மத்தியகிழக்கிற்கு மீண்டும் ஸ்திரதன்மையை கொண்டுவரப்போகின்றோம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் வர்த்தகரான டிரம்ப் காசாவை இடிக்கப்படவேண்டிய பகுதி,என வர்ணித்துள்ளதுடன் அது சமப்படுத்தப்படும்,சரி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனிய மக்களை அழகான இடங்களில் மீளகுடியமர்த்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51