நானுஓயா - பதுளை இடையிலான புதிய ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம் !

Published By: Digital Desk 2

10 Feb, 2025 | 11:17 AM
image

நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நானுஓயா ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்வின் பின்னர், ரயில் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தலைமையில் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பயணிகளின் சுற்றுலாப் தேவையின் அடிப்படையில் இந்த ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த  ரயில் செவ்வாய்க்கிழமையை  தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 7,000 ரூபாவும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 6,000 ரூபாவும் மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 5,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ரயில் சேவையினை பாராட்டி நானுஓயா ரயில் நிலையத்தில் பெருளமளவான வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் , சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் மற்றும்  பொதுமக்கள் இந்த ரயில் சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35