விமானப்படையின் புதிய தளபதியாக பதவியேற்ற பின்னர், எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க கடந்த 8ஆம் திகதி கண்டியிலுள்ள புனித ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.
புதிய விமானப்படைத் தளபதி முதலில் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று புனித தாது சின்னத்தை வணங்கி ஆசிகளைப் பெற்ற பின்னர், மல்வத்த மகாவிஹாரைக்கு சென்று வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
அதன் பின்னர், விமானப்படைத் தளபதி, அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்று, அஸ்கிரி மகா விஹாரைப் பிரிவின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வாரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பங்கநாநந்த ஞானரதன மகாநாயக்க தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.
இந் நிகழ்வில், விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி கிருஷாந்தி எதிரிசிங்க உட்பட விமானப்படை குழுவினர் கலந்து கொண்டனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM