கிளிநொச்சி இரணைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 19ம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரணைதீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த 14 பேரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த 14 மீனவர்களையும் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM