கல்முனையில் விளையாட்டு மைதானத்தில் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை

Published By: Digital Desk 2

10 Feb, 2025 | 11:05 AM
image

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  தீ வைப்பு சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (9) முதல் லெஜன்ஸ் கிரிக்கெட் 7 என்ற பெயரில் கடின பந்து சுற்றுக்போட்டியை நடாத்தும் லெஜன்ஸ்  விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான மைதான ஆடுகள விரிப்பு, இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக லெஜன்ஸ் கழகம் சார்பாக அதன் செயலாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரும் அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவினரும் (SOCO) வரைவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரியூட்டப்பட்ட  மைதான ஆடுகள விரிப்பின்  பெறுமதி 120,000  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது மைதானத்தில் கடமையாற்றும் காவலாளி கடமையில் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதேபோன்ற சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21