வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது ; தயாசிறி ஜயசேகர

09 Feb, 2025 | 05:28 PM
image

(எம்.ஆர். எம். வசீம்)

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தீ வைத்தவர்களிடமிருந்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் பெயர் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

போராட்ட சந்தர்ப்பத்தில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் நட்டஈடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தின் போது 42 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் பிரதேச அரசியல் வாதிகள் 72பேருக்கும் 500 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. இதனை யாரும் தெரிவிக்கவில்லை.

இந்த நட்ட ஈடு தொகை மதிப்பிடப்பட்டிருப்பது மதிப்பீட்டு திணைக்களத்தினால் ஆகும். அதனால் யாராவது தவறான முறையில் மதிப்பீட்டை பயன்படுத்தி இந் நஷ்டஈட்டை பெற்றிருந்தால் அந்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம் இந்த வீடுகளுக்கு தீ வைப்பதற்கு வந்தவர்களுக்கு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பொலிஸ் பீம அறிக்கையை நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம். 

நட்டஈடு பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலை வெளியில் போட்டவர்களின்அணியை சேர்ந்தவர்களும் வீடுகளை எரிப்பதற்கு வந்த பட்டியலில் இருக்கின்றனர்.

அவர்களின் பெயர் பட்டியலை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம். இவர்கள் தீ வைத்ததால் அரங்கத்துக்கு நஷ்டஈடு வழங்க நேரிட்டது.

அதனால் வீடுகளுக்கு தீ வைத்தவர்களிடமும் அவர்கள் ஏதாவது அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தால் அந்த அரசியல் மக்களிடமிருந்தும் கட்டாயமாக நட்டஈடு பெறவேண்டும்.

நட்டஈடாக வழங்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் பணம். சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தியதாலே நட்டஈடு வழங்க நேரிட்டது. எனவே நட்டஈடாக வழங்கப்பட்ட பணத்தை வீடுகளுக்கு தீ வைத்தவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேநேரம் மதிப்பீட்டு தொகையை விட அதிக பணம் பெற்றிருந்தால் அந்த பணத்தையும் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு -  6...

2025-03-21 12:08:17