கிளி­நொச்சி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட முக­மாலை பகு­தியில் பொலிஸ் ரோந்து பிரி­வினர் மீதான துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரும் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு பொலிஸார் சம்­பவம் தொடர்பில் சந்­தேக­ ந­ப­ரான முன்னாள் போராளி ஒரு­வரை கைது செய்­துள்­ளனர்.

கடந்த மாதம் கிளி­நொச்சி பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட முக­மாலை கச்சார் வெளிப் பகு­தியில் ரோந்து செல்லும் பொலி­ஸாரை இலக்கு வைத்து துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. நள்­ளி­ரவு 12.31 மணி­ய­ளவில் இடம்­பெற்ற இத் துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் பொலிஸார் எவ­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை.

பொலி­ஸாரை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட இத் துப்­பாக்கி சூட்டு சம்­ப­வத்­தினால் பொலிஸார் எவ­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத நிலையில் அருகில் இருந்த ரயில்வே சமிக்ஞ்ஞை செயற்­பாட்டு அறையின் கத­வுகள் சேத­ம­டைந்­தது.

இச் சம்­ப­வத்தை தொடர்ந்து குறித்த பகு­தியில் அதி­க­ள­வான பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் வர­வ­ழைக்­கப்­பட்டு தேடுதல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அத்­துடன் இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் பொறுப்பு பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­னூ­டாக நேற்­று­முன்­தினம் இரவு முன்னாள் விடு­தலை புலி உறுப்­பினர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். யாழ்ப்­பாணம் உரும்­பிராய் ஞான வைரவர் கோவி­ல­டியை சேர்ந்த கிரு­பா­னந்தன் கணேசன் என்­ப­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நேற்­று­முன்­தினம் இரவு இவ­ரது வீட்­டிற்கு சென்ற பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு பொலிஸார் இவரை கைது செய்­துள்­ளார்கள். குறித்த நபர் வவு­னி­யாவை சொந்த இட­மாக கொண்­டி­ருந்­த­தா­கவும், யாழ்.உரும்­பி­ராயில் தற்­கா­லி­க­மா­கவே வசித்து வந்­த­தா­கவும் பொலிஸ் தரப்பு தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் முற்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.