இலங்கையின் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியம்

Published By: Digital Desk 7

09 Feb, 2025 | 11:09 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தை பிரிதிநித்துவம் செய்ய அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஊழியர் மட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டது.

இதன் போது 2025 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை இன்னும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மாத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு  திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க உள்ளது. இந்த வரவு - செலவு திட்டத்தில் நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகள் அல்லது நிபந்தனைகள் எத்தகையதாக உள்ளது என்று கேள்வியெழுப்பியுள்ளீர்கள்.

2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும்  இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் நாணய நிதியத்தின்  நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.

இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் பாராட்டத்தக்க விளைவுகளைத் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது - மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.  

எனினும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும். எனவே  விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கும் வகையில், 2025 வரவு -செலவு திட்டத்தை சமர்ப்பது முக்கியமாகும் என குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36