டிக்கோயா சந்தியில் பஸ் - முச்சக்கரவண்டி விபத்து - ஒருவர் காயம்

Published By: Digital Desk 2

09 Feb, 2025 | 10:58 AM
image

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதி டிக்கோயா சந்தியில்,  தனியார் பஸ்ஸூம் முச்சக்கர வண்டியும் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா அன்ஃபீல்ட் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, டிக்கோயா சந்தியில் திடீரென ஒரு பக்க வீதியில் திரும்பி, நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸூடன் பின்னால் மோதியதில், முச்சக்கர வண்டி வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார், விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52
news-image

வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில்...

2025-03-23 12:38:35