கிண்ணியாவில் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் பல தென்னை மரங்களையும், வாழை, முதலான பயிர்களையும் துவம்சம் செய்துள்ளதோடு, ஒர் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மைகளையும் துவம்சம் செய்துள்ளதாக கிண்ணியா கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்ட, கிண்ணிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் , மஜீத் நகர் முதலான பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (08) இரவு இடம் பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிண்ணியா கிராம மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
மனித யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் இல்லை.
அந்த வகையில்,கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குளம் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் தென்னை, கத்தரி முதலான பயிர்களையும் வேளாண்மைகளையும் நாசமாக்கி உள்ளன.
இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பல தென்னை மரங்களையும்,வேளாண்மையும் நாசமாக்கி உள்ளன. யானையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஒரு ஏக்கர் வயல் நிலங்களை நாசமாக்கி விட்டது .
இந்தப் பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது. இரவு நேரங்களில் எங்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்தால் வெளியில் செல்ல முடியாது .
இதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
இரவு நேரங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். சரியான முடிவு பெற்றுத் தர வேண்டும் என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM