வெளி­நா­டு­களில் பணி­யாற்­று­கின்ற இலங்கையின் மூன்று தூது­வர்கள் இரட்டைக் குடி­யு­ரிமை கொண்­ட­வர்கள் என்று ஸ்ரீ­லங்கா வெளி­வி­வ­கார அமைச்சு கண்­ட­றிந்­துள்­ளது. பங்­க­ளாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெ­ரிக்­காவின் லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கை தூது­வர்­களே இரட்டைக் குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வர்கள் என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தே­ஷுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றி வரும் வை.கே.குண­சே­கர, பிரித்­தா­னியா மற்றும் இலங்கை குடி­யு­ரிமை கொண்­டவர். பிரான்­ஸுக்­கான இலங்கை தூது­வ­ராகப் பணி­யாற்றும் திலக் ரண­வி­ராஜா அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளவர். லொஸ்­ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜென­ர­லாகப் பணி­யாற்றும், சுவர்ணா குண­ரத்ன கனே­டிய குடி­யு­ரி­மை­யையும் கொண்­டவர் என்று தெரிய வந்­துள்­ளது. இவர்­களில், வை.கே.குண­சே­கர மாத்­தி­ரமே, இலங்கை வெளி­வி­வ­காரச் சேவையில் உள்­ள­வ­ராவார்.

அதே­வேளை, பிரான்­ஸுக்­கான புதிய தூது­வ­ராக பிரே­ரிக்­கப்­பட்­டுள்ள புத்தி அதா­வு­டவும் அமெ­ரிக்க குடி­யு­ரிமை கொண்­டுள்­ள­வ­ராவார். அதே­வேளை, இரா­ஜ­தந்­திரப் பத­வி­களில் ஏனைய தரங்­களில் உள்ள அதி­கா­ரி­க­ளிலும் பலர் இரட்டைக் குடி­யு­ரிமை பெற்­ற­வர்கள் இருப்­பது தெரிய வந்­துள்­ளது.

நியூ­யோர்க்கில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் மின்ஸ்டர் கவுன்­சி­ல­ராக உள்ள சோனாலி சம­ர­சிங்க அமெ­ரிக்க குடி­யு­ரிமை கொண்­டுள்­ள­வ­ராவார்.

பிரித்­தா­னிய குடி­யு­ரிமை கொண்ட மனோஜ் வர்­ண­பால லண்­டனில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில், கவுன்­சி­ல­ராக பணி­யாற்­று­கிறார். லண்­டனில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில், மூன்­றா­வது செய­லாள­ராகப் பணி­யாற்றும் எஸ்.என்.குரே பிரித்­தா­னிய குடியுரிமையைக் கொண்டுள்ளவராவார்.

அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான பாலசூரிய, ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்தில் இரண்டாவது செயலராக பணியாற்றுகிறார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது