(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய 2024ஆம் ஆண்டுக்கான 14 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சமபோஷ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சிறுமிகள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி 4ஆவது தடவையாக சம்பியனானது.
கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (07) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி அணியை 3 - 2 என்ற பெனல்டி முறையில் வெற்றிகொண்டு மகாஜனா கல்லூரி சம்பியனானது.
முழுநேரத்தின்போது அப் போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் பெனல்டி முறையில் சம்பியன் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் 2023இல் மலியதேவவிடம் அடைந்த தோல்வியை மகாஜனா நிவர்த்திசெய்துகொண்டது.
கால் இறுதிப் போட்டியில் கிரிந்திவெல மகா வித்தியாலயத்தை 3 - 0 எனவும் அரை இறுதியில் யட்டியாந்தோட்டை என்.எம். பெரேரா வித்தியாலயத்தை 4 - 0 எனவும் மகாஜனா வெற்றிகொண்டிருந்தது.
இந்த சுற்றுப் போட்டியில் மகாஜனா கல்லூரி அணியின் தலைவி எஸ். யாழினி அதிசிறந்த வீராங்கனை விருதை வென்றெடுத்தார். அவர் மொத்தமாக 9 கோல்களைப் போட்டிருந்தார்.
சம்பியனான மகாஜனா அணியில் எஸ். யாழினி (தலைவி), எஸ். கேதாரணி, ஏ. அஷ்வினி, எஸ். ஷானுக்கா, கே. சப்திக்கா, ஆர். சோபிக்கா, எஸ். ஹஷ்னா, ஏ. ஆருஞ்சா, ரி. லஸ்மிதா, ஏ. கேனுஷா, ஆர். ரம்யா, எஸ். கபிஷனா, ஏ. பெஷங்கியா, வி. டிலக்சிக்கா, எஸ். பரிமளை ஆகியோர் இடம்பெற்றனர். பயிற்றுநர்: எஸ். சாந்தகுமார்
இதேவேளை, சிறுமிகள் பிரிவில் திருகோணமலை இலங்கைத்துறைமுகத்துவாரம் இந்து கல்லூரி 4ஆம் இடத்தைப் பெற்றது.
சமபோஷ கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே இப் பாடாலை நான்காம் இடத்தைப் பெற்றது பாராட்டுக்குரியதாகும்.
3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் என்.எம். பெரேரா கல்லூரி அணியிடம் 2 - 3 என்ற பெனல்டி முறையில் இந்து கல்லூரி தோல்வி அடைந்தது.
அப் போட்டி 2 - 2 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தததைத் தொடர்ந்து பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது. சர்மி ஒரு கோலையும் சன்சியா ஒரு கோலையும் போட்டனர்.
கால் இறுதியில் இரத்தினபுரி சீவலி வித்தியாலயத்தை 4 - 0 (சர்மி 4 கோலகள்) என வெற்றிகொண்டிருந்த இலங்கைத்துறைமுகத்துவாரம் இந்து கல்லூரி அரை இறுதியில் கால்பந்தாட்டத்தில் பிரசித்திபெற்ற மலியதேவ பெண்கள் வித்தியாலயத்திடம் 0 - 2 என தோல்வி அடைந்தது.
இந்து அணியில் ஜீ. சன்சியா (தலைவி), எஸ். சர்மி,, ஈ. கிருசா, ரி. தயுனிகா, கே. தீபிஷா, என். கேதுசா, எஸ். ரிஷிபிரதா, எம். சகிஷாயினி, ஆர். டிலக்ஷியா, எம். யதுசியா, வி. விவர்சிகா, எம். தர்மிகா, கே. கதுஸ்கா, என். மிருசியா, எஸ். திலக்ஷினி, கே. ஷபரிஷா ஆகியோர் இடம்பெற்றனர். பயிற்றுநர்: எஸ். பிரேமச்சந்திரன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM