(நெவில் அன்தனி)
மருதானை ஸாஹிரா கல்லூரியின் ஸாஹிரா வெட்டரன்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்துள்ள மாஸ்டர்ஸ் சமர் கால்பந்தாட்டம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) காலை 8.00 மணிமுதல் நடைபெறவுள்ளது.
கால்பந்தாட்டத்தில் பிரபலமான இளவாலை புனித ஹென்றியசர் கல்லூரி உட்பட எட்டு கல்லூரிகளின் மூத்த வீரர்கள் அடங்கிய வெட்டரன்ஸ் அணிகள் இப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
நொக் அவுட் முறையில் நடத்தப்படும் மூத்தவர்கள் சமரில் முதலாவது கால் இறுதியில் நடப்பு சாம்பியன் ஸாஹிரா - றோயல் வெட்டரன்ஸ் அணிகளும் இரண்டாவது கால் இறுதியில் பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் - இளவாலை புனித ஹென்றியரசர் வெட்டரன்ஸ் அணிகளும், மூன்றாவது கால் இறுதியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் - ஹமீத் அல் ஹுசெய்னி வெட்டரன்ஸ் அணிகளும் நான்காவது கால் இறுதியில் கம்பளை ஸாஹிரா - கந்தானை டி மெஸிநொட் வெட்டரன்ஸ் அணிகளும் மோதவுள்ளன.
கால் இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் பிரதான கிண்ணத்துக்கான அரை இறுதிகளிலும் தோல்வி அடையும் அணிகள் கோப்பைக்கான அரை இறுதிகளிலும் விளையாடும்.
ஒவ்வொரு அணியிலும் 40 வயதுமுதல் 44 வயதுவரை ஐவரும் 45 வயதுமுதல் 49 வயதுவரை இருவரும், 50 வயதுக்கு மேற்பட்ட மூவரும் 40 வயதுக்கு மேற்பட்ட கோல்காப்பாளருமாக 11 வீரர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றுப் போட்டியில் சிறந்த வீரர், சிறந்த கொல்காப்பாளர் ஆகியோருக்கும் இறுதி ஆட்டநாயகனுக்கும் விசேட விருதுகள் வழங்கப்படும்.
இப் போட்டிக்கான பிரதான அனுசரணையை த பெஷன் ஸ்டோர்ஸ் (TFS) நிறுவனமும் ப்ளட்டினம் அனுசரணையை அப்துல்லா குறூப் நிறுவனமும், தங்க அனுசரணையை TVS லங்கா நிறுவனமும், சேவ்டி பாட்னர்ஸ் நிறுவனமும் வழங்கின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM