(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள திமுத் கருணாரட்ன கடைசி தடவையாக இன்றைய தினம் துடுப்பெடுத்தாடி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2012இல் நடைபெற்ற போட்டி மூலம் டெஸ்ட் அறிமுகம் பெற்ற திமுத் கருணாரட்ன 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்துள்ளதுடன் நாளை கடைசி முறையாக களத்தடுப்பில் ஈடுபடவுள்ளார்.
இதுவரை 191 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள திமுத் கருணாரட்ன 16 சதங்கள், 39 அரைச் சதங்களுடன் 7222 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிராக பல்லேகலையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் பெற்ற 244 ஓட்டங்களே ஓர் இன்னிங்ஸில் அவரது அதிகூடிய எண்ணிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கடைசி தடவையாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ள திமுத் கருணாரட்னவுக்கு காலி சர்வதேச விளையாட்டரங்கில் நாளைய தினம் மனங்குளிர்ச்சியான பிரியாவிடை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM