14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை 64 ஓட்டங்களால் வெற்றிகொண்டது யாழ். இந்து; தொடரிலும் 4 - 3 என முன்னிலை

Published By: Vishnu

08 Feb, 2025 | 09:05 PM
image

(நெவில் அன்தனி)

யாழ். இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) கல்லூரிக்கும் இடையில் யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (08) முடிவுக்கு வந்த 14ஆவது இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 64  ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கொழும்பு இந்து கல்லூரியின் கடைசி 3 விக்கெட்ளை ஹெட் - ட்ரிக் முறையில் வீழ்த்தி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த யாழ். இந்து வீரர் சுதர்சன் சுபர்னன் தனது அணி வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.

இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 4 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்துள்ளது.

யாழ். இந்து கல்லூரியினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கொழும்பு இந்து கல்லூரி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்ததால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் கடைசி 7 விக்கெட்கள் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்ததால் யாழ். இந்து மகத்தான வெற்றியை ஈட்டியது.

ஆரம்ப வீரர் சுரேஷ் குமார் மிதுஷிகன் மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 144 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது பலனற்றுப் போனது.

திவேந்திரன் யதுஷனுடன் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷுடன் இரண்டாவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும்  மிதுஷிகன் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டார்.

மிதுஷிகனை விட மத்திய வரிசை வீரர் சுரேஷ் சர்விஷ் 39 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் திவேந்திரன் யதுஷன் 25 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷ், பத்மநாதன் ஸ்ரீ நிதுசான் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

கொழும்பு இந்துவின் கடைசி 3 துடுப்பாட்ட வீரர்களான சுரேஷ் சர்விஷ், விஸ்வநாதன் யுவராஜ், அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் ஆகிய மூவரை ஹெட் - ட்ரிக் முறையில் சுபர்னன் ஆட்டம் இழக்கச் செய்து 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட கனகராஜ் நிதீஸ் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். இந்து கல்லூரி 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை டிக்ளயார் செய்து நிறுத்திக்கொண்டது.

அணித் தலைவர் கிருஷ்ணராஜ் பரஷித் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகளுடன் 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் சுதர்சன் சுபர்னனுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தொடர்ந்து  சுபர்னன் (16), அன்டன் விமலதாஸ் விதுசன் (25) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 93 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் யாழ். இந்து கல்லூரி தடுமாற்றம் அடைந்தது. (110 - 8 விக்.)

எனினும், இந்திரலிங்கம் ஸ்ரீவஸ்தன் (26), 10ஆம் இலக்க வீரர் சுதர்சன் அபிவர்ணன் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

கொழும்பு இந்து பந்துவீச்சில் ராமநாதன் தேஷ்கர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஸ்வநாதன் யுவராஜ் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான இந்த இரண்டு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

கொழும்பு இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விககெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ். இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (ஏ. விதுஷன் 49, கே. பரஷித் 20, வி. யுவராஜ் 27 - 4 விக்.)

கொழும்பு இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 91 (ரீ. சந்தோஷ் 42, கே. நித்தீஸ் 12 - 4 விக்.),

யாழ். இந்து 2ஆவது இன்: 170 - 9 விக். டிக்ளயார்ட் (கே. பரஷித் 39, எஸ். அபிவர்ணன் 27, ஆர். தேஷ்கர் 35 - 4 விக்., வி. யுவராஜ் 47 - 4 விக்.)

கொழும்பு இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 187 (சுரேஷ்குமார் மிதுசிகன் 72, எஸ். சர்விஷ் 39, சுதர்சன் சுபர்னன் 58 - 6 விக்.

விசேட விருதுகள்

ஆட்டநாயகன்: சுதர்சன் சுபர்னன் (யாழ் இந்து)

சிறந்த துடுப்பாட்ட வீரர்: சுரேஷ்குமார் மிதுசிகன் (கொழும்பு இந்து)

சிறந்த பந்துவீச்சாளர்: விஸ்வநாதன் யுவராஜ் (யாழ். இந்து)

சிறந்த களத்தடுப்பாளர்: தினேஷ்ராமன் பிரீத்திகன் (யாழ். இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36