SLIM National Sales Awards 2024 இல் HNB பொதுக் காப்புறுதிக்கு உயர் விருதுகள்

08 Feb, 2025 | 06:18 PM
image

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்திருந்த தேசிய விற்பனை விருதுகள் 2024 (National Sales Awards 2024) இல் மதிப்புமிக்க மூன்று விருதுகளை HNB பொதுக் காப்புறுதி (HNBGI) பெற்றுள்ளது.

2023-2024 காலப் பகுதியில் HNBGI இன் ஒப்பிட முடியாத விற்பனை சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் Channel Development முகாமையாளர் தனிடு டி. கலப்பத்தி தேசிய விற்பனை முகாமையாளர் பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றார். 

HNBGI மாலபே கிளை முகாமையாளர் புலஸ்தி பண்டார பிராந்திய முகாமையாளர் பிரிவில், தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இதே பிரிவில், HNBGI கொழும்பு தெற்கு பிரிவின் Cluster முகாமையாளர் ரங்க தேஷான், கிளைச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதிலான அவரது திறமைக்காக மெரிட் விருதை வென்றார். 

இந்த பாராட்டுகள் HNBGI இன் விற்பனைப் படையினரின் விசேடத்துவம், புத்தாக்கம், தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகிய விடயங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. 

SLIM National Sales Awards 2024 இல் கிடைத்த இந்த அங்கீகாரமானது, இத்துறையில் முன்னணியில் உள்ள HNBGI இன் நிலையை, ஆர்வமுள்ள மற்றும் உயர் செயல்திறன் கொண்ட குழுவினரினால் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right