யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

08 Feb, 2025 | 06:18 PM
image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வை முன்னெடுத்தது இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தனது MDRT-தகைமை பெற்ற காப்புறுதி உறவுபேண் அதிகாரிகளின் (IROs) சிறந்த சாதனைகளை அண்மையில் கொண்டாடியது. 

The Million Dollar Round Table (MDRT) என்பது, காப்புறுதி ஆலோசகர்களுக்கு உலகளாவிய ரீதியில் வழங்கப்படும் அதியுயர் கௌரவிப்பாக அமைந்திருப்பதுடன், உயர் ஒழுக்க நியமங்களை பேணுவதுடன், பங்காளர்களுடன் நம்பிக்கை கட்டியெழுப்பும் வகையில் தொடர்ந்தும் செயலாற்றுவது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த காப்புறுதி தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது போன்ற சிறந்த செயற்பாடுகளை கௌரவித்து இந்த அந்தஸ்து வழங்கப்படுகின்றது. 

அணியினரின் வெற்றிகரமான செயற்பாடு தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பங்காண்மை விநியோக அதிகாரி வத்சலா அளுத்கெதர கருத்துத் தெரிவிக்கையில், 

“யூனியன் அஷ்யூரன்ஸில், சிறப்புக்கான சூழலை கட்டியெழுப்புவதில் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எமது காப்புறுதி உறவு அதிகாரிகளை அவர்களின் முழுமையான ஆற்றலை எய்தச் செயற்வதற்கு வலுவூட்டுகின்றோம். 

MDRT தகைமையை பெற்ற அங்கத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி என்பது, சிறந்த சாதனைகளின் பிரதிபலிப்பு மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பெற்றுக் கொடுக்கும் பெறுமதியையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right